அறப்போர்...

கடும் குளிர்
இரவில்...
சுடும் வெயில்
பகலில்...
சோர்ந்து விடாமல் போராடும்
இளைஞர் கூட்டம்...
உடல்நலம் பாராமல்
சுயநலம் இல்லாமல்
துள்ளி எழுந்தனர்
எம் தோழர்கள்...
கனவுகள் மிதக்கும்
கண்களில்
கனல் தெறிக்கிறது...
பாடம் சொல்லும்
உதடுகளில்
இடி முழங்குகிறது...
எழுதுகோல் ஏந்தும்
கரங்களில்
மின்னல் ஒளிர்கிறது...
பார்த்து நடக்கும்
பாதங்களில்
பாறைகள் பொடிபடுகின்றன...
பால்பேதம் இங்கில்லை...
இனபேதம் இங்கில்லை...
அறிந்த முகங்கள்
அருகில் இல்லை...
ஆனாலும் அச்சமில்லை...
கூடுவார்கள்...
கூச்சலிடுவார்கள்...
வந்த சுவடு தெரியாமல்
வீடு திரும்புவார்கள்
என்றே எண்ணிய
எண்ணங்களில் மண்தூவி
எண்ணம் செயல்
எல்லாம் ஒன்றே...
ஏறு தழுவல் என்று
சொல்லிக்காட்டிய
சுடர் விளக்குகளுக்கு
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
இனமும் மொழியும்
இனிய பண்பாடும்
இனி பகைவர் சதியில்
அழிந்துபோகாதென்று
அறைகூவிச் சொல்கிறோம்...


வெல்லட்டும் அறப்போர்...
               

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...