அவசரச் சட்டம்

எங்கள் பண்பாடுகள்
பாதுகாக்கப் படவேண்டுமென்றோம்...
ஏறுதழுவல்
எங்களுக்கு வேண்டுமென்றோம்...
உச்சியில் இருந்தோரின்
செவிகள் செவிடாகவே இருந்தன...
காளைகள்
காக்கப்பட வேண்டுமென்று
கதறிய எங்கள் குரல்
அவர்களின்
காதுகளில் விழவேயில்லை...
குரலின் தொணி
கொஞ்சம் மாறியது...
ஜெர்சி பசும்பாலின்
தீமைகள் சொன்னோம்...
பன்னாட்டு நிறுவனங்களின்
பொருட்களை
எந்நாளும் வாங்காதீர் என்றோம்...
பாரம்பரிய விவசாயத்தை
மீட்டெடுப்போம் என்றோம்...
பதறிக் கூடினர்...
பலவாறு பேசினர்...
கடைசியில்
தென்னாடு தேடி
ஓடி வந்தது
ஒரு அவசரச் சட்டம்...
அதுவும் ஒரே நாளில்...


உங்கள் செவித்திரை கிழித்தது
எதுவென்று எங்களுக்குத் தெரியும்...

இனி எங்கள்
மண்ணையும் மக்களையும்
பாழ் படுத்தும் எதையும்
இங்கே அனுமதிக்க
இளைஞர்கள் தயாரில்லை...

நீங்கள்
வித்தைகள் காட்ட
வேறிடம் தேடுங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...

என் பகல்கள்...