Posts

Showing posts from January, 2020

சுவாசிக்கிறேன்...

பிறந்ததிலிருந்து பெருங்கடலிலேயே வாழ்ந்தாலும் காற்றுக்கென மேலெழும்பும் திமிங்கலம்போல சூழல்தாண்டி சுவாசிக்கிறேன் உன் நினைவுகளை...

கதிரும் நிலவும்...

கதிரும் நிலவும் ஒளிர்கின்றன... ஒப்பனைகளேதும் இல்லாமல்...

கொஞ்சம் கொஞ்சமாய்...

கொஞ்சமாய் நீ பேசிய வார்த்தைகளை கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து நிரப்புகிறேன் என் மௌனங்களில்...

பேரன்பின் ஊற்று...

ஆறாச்சினமும் தீராவெறுப்பும் அடர்ந்துகிடக்கும் குப்பைகளை தூர்வாரி தூர எறிய சுரக்கும் பேரன்பின் ஊற்று...

உன் வாசம்...

தூரத்தில் பெய்யும் மழை காற்றில் தூவுகின்ற மண் வாசமென உன் வாசம் தூவுகிறாய் நெஞ்சில்...

நெருப்பு...

முகத்தில் உமிழப்பட்ட வெறுப்பின் மேல் அன்பை அள்ளிப்பூச அணைகிறது நெருப்பு...

வாடிவாசல்...

திமிரும் திமில்கள்... திமிலணைக்க துடித்திடும் தினவெடுத்த தோள்கள்... நெஞ்சுகீற பார்த்திருக்கும் கொம்புகள்... கொம்பின் சுழற்சியைக் கணிக்கும் கூர்விழிகள்... கயிறுகாணா மூக்கின் கனத்த சீற்றம்... அதை சுவாசிக்க விரிந்து நிற்கும் ஏறுதழுவும் முற்றம்... திறக்கக் காத்திருக்கிறது வாடிவாசல்...

நட்புக்கு நன்றி...

கிழிக்கும் முட்களுக்கு நடுவில் சிரிக்கும் மலர்போல சில மணித்துளிகள்... நட்புக்கு நன்றி...

ஏன்...

இருளுக்குள் விழுந்த ஒளிபோல என்னை ஏன் நீ விழுங்குகிறாய்... ஒளிக்குள் விழுந்த இருளென உன்னில் ஏன் நான் கரைகிறேன்...

விடியல்...

இருளின் துளிகளில் நனைந்த இரவு மெல்ல உலர விடிகிறது வெள்ளையாக...