எதை வைத்து திரையிடுவாய்...
இப்போதெல்லாம்
உன் காட்சிப்புலத்தில்
நானிருப்பதை
உன் கண்கள்
விரும்புவதில்லை...
உன் பேச்சின்
பொருளாக
நானிருப்பதை
உன் உதடுகள்
பொறுப்பதில்லை...
இருந்துவிட்டுப்
போகட்டும்...
விழிகளிலும்
மொழிகளிலும்
விடுபட்ட என்னை
நினைவுகளாக
ஏந்திவரும்
இரவுக்கு
எதை வைத்து
திரையிடுவாய்...
Comments
Post a Comment