கனவுகள்... Get link Facebook X Pinterest Email Other Apps December 10, 2019 மெலிந்த விரல்களிலிருந்து நழுவும் மோதிரம்போல நலிந்த வாழ்க்கையிலிருந்து நழுவுகின்றன கனவுகள்... Read more
மௌனமாக... Get link Facebook X Pinterest Email Other Apps December 10, 2019 உன் இதழ்கள் உதிர்க்கும் வார்த்தைகள் சுமக்க உனக்கும் எனக்கும் இடையே காத்திருக்கிறது காற்று மௌனமாக... Read more
கேட்பதில்லை... Get link Facebook X Pinterest Email Other Apps December 10, 2019 தழும்புகள் தாங்கிய முதுகு சொல்லும் கதைகளை நட்பில் நனையும் என் இதயம் எப்போதுமே கேட்பதில்லை... இன்னுமொரு தழும்பு எண்ணிக்கையில் ஏறினாலும்.... Read more
தூரமில்லை... Get link Facebook X Pinterest Email Other Apps December 10, 2019 உன்னைச் சுமக்கும்வரை நெஞ்சத்தில் பாரமில்லை... நீ இறங்கிவிட்டால் துயரெனக்கு தூரமில்லை... Read more
தனித்தனியாக... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 உடைந்த கண்ணாடியின் ஒவ்வொரு துண்டுகளிலும் ஒரே முகம் தனித்தனியாக... Read more
ஈரமாகிறது மனது... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 சிறுபாறைகளின் வழியாக நெளிந்தோடும் ஓடையென சலசலக்கும் நினைவுகளில் ஈரமாகிறது மனது... Read more
நானும் காரணங்களும்.. Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 ஒவ்வொன்றாக காரணங்கள் தேடுகிறேன் உன்னைப் பார்ப்பதற்கு... நீயோ காரணங்களின் மேலேறி கடந்து செல்கிறாய்... பிறகு மிச்சமிருப்பது நானும் காரணங்களும்... Read more
கீழிறங்கவும்தான்... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 முகடுகளுக்கு மேலே பறந்தாலும் பருந்துகளுக்கு நன்றாகவே தெரியும்... மேலெழும்ப மட்டுமல்ல கீழிறங்கவும்தான் இறக்கைகளென்று... Read more
நடிக்கிறாய்... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 என் தொலைந்த பொழுதுகள் எல்லாம் குவிந்து கிடக்கின்றன உன் மனதிலென தெரிந்தபின்னும் தேடுவதுபோல நான் நடிக்கிறேன்... தெரியாததுபோல நீ நடிக்கிறாய்... Read more
வானம்... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 நித்தமும் திறந்தே கிடக்கிறது நிலவுக்கான வானம்... Read more
மெல்ல உடைகிறது... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 பெருமழையெனப் பொழியும் உன் நினைவுகள் வெள்ளமெனப் பெருக்கெடுக்க மெல்ல உடைகிறது இரவின் கரை.. Read more
வராத உறவுகள்... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 பசி தின்னும் வேளைகளில் கிடைக்காத உணவென மாறிப்போகின்றன வலிகளின்போது வராத உறவுகள்... Read more
இடைவிடாது விழுகிறாய்... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 அடைமழையின் தூறல்களென இடைவிடாது விழுகிறாய் எனக்குள்... நெஞ்சம் நிறைந்தபின் வழிகிறது நெஞ்சினுள்ளேயே... Read more
உதிர்ந்த இலை... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 எதிர்திசையில் நீந்தும் மீன்களுக்கு மேல் ஓடும் நீரின் போக்கில் மிதக்கிறது உதிர்ந்த இலை... Read more
இறங்குகிறது மின்னல்... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 பெருமழையைச் சுமக்கும் கருமேகங்களின் நடுவேயிருந்து பளீரென இறங்குகிறது மின்னல்... உன் கூந்தலில் ஆடும் பூச்சரத்தைப்போல... Read more
கல்... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 சலனமில்லா நிறைகுளத்தில் கல்லெறிகிறார்கள்... கரைநோக்கி செல்கின்றன அலைகள்... தரைநோக்கி செல்கிறது கல்... Read more
தெரிந்தேதான் நனைகிறேன்... Get link Facebook X Pinterest Email Other Apps December 03, 2019 அடைமழை எனத் தெரிந்தேதான் நனைகிறேன்... உனக்கு நனையப் பிடிக்கும் என்பதற்காக அல்ல... குறைந்தபட்சம் உன் நினைவுகளேனும் நனையட்டும் என்றுதான்... Read more