ஆதார் அட்டை

மகனும் மகளும்
வந்தாச்சு
பேரன் பேத்தியெல்லாம்
பாத்தாச்சு
பாலும் ஊத்தியாச்சு
பாவம் கிழவி உசிரு
இன்னும் போகல
பாசக் கயிரோட
வாசல்ல நின்னு
பாத்துக்கிட்டே இருக்காரு
எமதர்ம ராசா
ரெண்டு நாளா
என்னனு விசாரிச்சா
இப்பதான் தெரிஞ்சுது
கிழவிக்கு இல்லையாம்
ஆதார் அட்டை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

ஒவ்வொரு நாளும்...