குருவியும்தான்...

ஆற்றங்கரை ஓரத்தில்
அடர்ந்துநிற்கும்
தூங்குமூஞ்சி மரத்தின்
நெடுங்கிளையில் பிரிந்த
சிறுகிளையின் நுனியில்
கூடுகட்டிய தூக்கணாங்குருவி நான்...

பாம்பு ஊர வழியின்றி
பருந்து அமர இடமின்றி
பார்த்துப் பார்த்துக்
கட்டிய கூடு...

கல்லால் அடித்தாலும்
எட்டாத உயரமென்று
இருமார்ந்து இருந்தபோது
சொல்லால் அடித்ததில்
சுக்குநூறானது...

நொறுங்கிப் போனது
கூடு மட்டுமல்ல
குருவியும்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...