அப்பா...

அப்பா...

திரும்பாப் பயணம்
நீங்கள் சென்று
நீண்ட ஆண்டு ஒன்று
நீங்கி விட்டது...

ஆண்டொன்று கடந்த பின்னும்
அருகில் நீங்கள்
இல்லையென்பதை ஏற்க
அஞ்சி நிற்கிறது நெஞ்சு...

புழுதிப் பெருங்காற்று
புயலென வீசியபோது
எனது இமைகள்
விழிகளை மூடும்முன்
உங்களின் இரு கைகள்
என் கண்களை
மூடிய கணங்கள்
கனவிலும் துரத்துகின்றன...

சேற்றை நான் தாண்டுகையில்
என் செருப்புகூட
அழுக்காக கூடாதென்று
தங்களின் கரங்கள் என்னைத்
தூக்கி விட்ட கணங்கள்
என்னைத்
தூங்கவே விடுவதில்லை...

கடும் காய்ச்சலில்
உடல் சோர்ந்து
உள்ளம் நொந்து
உதடுகள் காய்ந்து
விழிமூடிக் நான் கிடக்கையில்
உங்கள் கண்ணீரால்
என் கன்னங்கள்
ஈரமான கணங்கள்
இப்போது
என் கண்களை
ஈரமாக்குகின்றன...

என்னால்
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை
என்னோடு நீங்கள்
இல்லையென்பதை...

                              ராஜ்குமார்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...