எப்போது கேட்பது...

மணல் தின்று
ஆறுகள் கொன்றார்கள்...
அப்போதும் கேட்கவில்லை

ஏரி குளங்கள் உருமாற்றி
ஏதேதோ செய்தார்கள்...
அப்போதும் கேட்கவில்லை

வாய்க்கால் வழிகளைச்
சாக்கடை ஆக்கினார்கள்...
அப்போதும் கேட்கவில்லை

விளைநிலங்களை
விளையாத் தரிசாக்குவார்கள்...
அப்போதும் கேட்காதீர்கள்

எதுவும் குறைந்து போகாது
ஒன்றைத் தவிர...

அது
அடுத்த தலைமுறை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...