ஆண்டவனே ...

ஆண்டவனே...

அவலக்குரல் கேட்டு
பதினோராம் பரிமாணத்திலிந்து
மூன்றாம் பரிமாணத்திற்கு
காலெடுத்து வைத்தார்
கடவுள்...

காலுக்கு கீழே
வெடித்துச் சிதறின
ஹைட்ரஜன் குண்டுகள்...

வெடுக்கென காலை
எடுத்தபின்
என்னவென்று பார்க்க
முகம் நுழைந்தார்

மூன்றாம் பரிமாணத்தில்...
மூக்கில் ஏறிய
மீத்தேன் நெடியில்
தலை கிறுகிறுக்க
சட்டென்று வெளியேறி
இரு காதுகளிலும்
இறுகப் பஞ்சடைத்து
பதினோராம் பரிமாணத்தில்
படுத்துக்கொண்டார்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...