கேள்விகளும் பதில்களும்...

நீ

என்னிடம் ஏதும்

சொல்வதுமில்லை...

நான்

உன்னிடம் ஏதும்

கேட்பதுமில்லை...

உன் நினைவுகளின்

குறுக்கு வெட்டுத்

தோற்றத்தில்

நானிருக்கிறேன்...

என் நினைவுகளின்

நீள்வெட்டுத்

தோற்றத்தில்

நீயிருக்கிறாய்...

பொருளற்றுப்

போகின்றன

கேள்விகளும்

பதில்களும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...