அப்பா...

 கடந்த நொடியெனவே

காலம் காட்டுகிறது

ஆண்டுகள் ஐந்து

அடங்கிய பின்னரும்...

இன்றைக்கும்

உறங்கியெழும்

வேளையில்

உங்கள் குரலே

செவி தட்டுகிறது...

ஊரடங்கி

உறங்கச் செல்லும்

வேளையிலும்

உங்கள் விரல்களே

தலை வருடுகிறது...

அப்பா...

எப்போதும்

அளவில்லா அன்பின்

உச்சாணி...

இப்போதும்

எங்கள் வாழ்வின்

அச்சாணி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...