இறுக்கமாகவே இரு..

பாறையிடுக்கில்

தேங்கும் நீர்போல

உன் மனதில்

தேங்குகிறேன்...

நீ

இறுக்கமாகவே இரு...

மழையெனப் பொழிந்து

வெயிலெனக் காய்ந்து

பனியெனப் பெய்யும்

என் நினைவுகள்

விரிசல்கள்

செய்யும்வரை

நீ

இறுக்கமாகவே இரு..

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...