முரண்...

நெடுங்கிளைகள் ஒடித்தெறியும்
பெருந்துதிக்கையில்
சிறு அங்குசம்...

கற்பாறைகளை
இடறித்தள்ளும் கால்களில்
கட்டிய சங்கிலி....

பெருமரங்கள்
பெயர்த்தெறியும்
மத்தகத்தின் பின்னால்
பிழையாக
ஒரு மனிதன்...

பிச்சையெடுக்கிறது
பெருங்களிறு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...