சே...
சலவைகாணா உடை
சவரம்காணா முகம்
ஆயினும்
அழுக்கில்லா புன்னகை...
அவன்தான் சே...
மண்ணை வென்றவர்கள்
மறைந்து போகலாம்
மனங்களை வென்றவர்கள்
மரணிப்பதே இல்லை...
ஐம்பது ஆண்டுகள்
ஆனாலென்ன
ஆயிரம் ஆண்டுகள்
போனாலென்ன
தங்கத்தில் ஒருபோதும்
துரு ஏறுவதில்லை...
அடிமைச் சங்கிலியின்
மேல் விழும்
ஒவ்வொரு அடியிலும்
உன்குரல் ஒலிக்கும்...
அடக்குமுறைகளை
ஒடுக்க முனைகையில்
உன்சினம் தெறிக்கும்...
பயந்தவன்
கோழையாகிறான்
துணிந்தவன்
வீரனாகிறான்
துணிவின் ஒளியில்
இப்போதும் நீ
வாழ்கிறாய் சே...
சவரம்காணா முகம்
ஆயினும்
அழுக்கில்லா புன்னகை...
அவன்தான் சே...
மண்ணை வென்றவர்கள்
மறைந்து போகலாம்
மனங்களை வென்றவர்கள்
மரணிப்பதே இல்லை...
ஐம்பது ஆண்டுகள்
ஆனாலென்ன
ஆயிரம் ஆண்டுகள்
போனாலென்ன
தங்கத்தில் ஒருபோதும்
துரு ஏறுவதில்லை...
அடிமைச் சங்கிலியின்
மேல் விழும்
ஒவ்வொரு அடியிலும்
உன்குரல் ஒலிக்கும்...
அடக்குமுறைகளை
ஒடுக்க முனைகையில்
உன்சினம் தெறிக்கும்...
பயந்தவன்
கோழையாகிறான்
துணிந்தவன்
வீரனாகிறான்
துணிவின் ஒளியில்
இப்போதும் நீ
வாழ்கிறாய் சே...
Comments
Post a Comment