மகிழ்வதில்லை...

வண்ணமயமான கனவுகளின் நடுவே
வாழ்ந்து கொண்டிருந்தபோது
வெந்நீர் சொற்களை
வெடுக்கென்று வீசிய உதடுகளும்
என் கனவுகளில்
அமிழ்தம் தடவி
இனிமை சேர்த்த உதடுகளும்
வேறு வேறு அல்ல...

என் பாதங்களுக்கு கீழே
பள்ளம் பறித்தவர்களுக்கும்
என் பாதைகளெங்கும்
முட்கள் பரப்பியவர்களுக்கும்
என்னைத் தோற்கடித்தவர்களுக்கும்
என்னிடம் தோற்றவர்களுக்கும்கூட
நன்றாகவே தெரியும்
கெட்ட எண்ணங்களால் நான்
கட்டமைக்கப் படவில்லையென்று...
இதனை ஏனோ அந்த
உதடுகள் உணரவில்லை...

இனி நான் எப்போதும்
எழுதப்போவதில்லை...
ஈரமில்லா நிலத்தில்
எந்த விதையும் முளைப்பதில்லை...
ஈரமில்லா இதயத்தில்
எழுத்துக்கள் விளைவதில்லை...
என் இதயத்தில்
இப்போது ஈரமில்லை
ஏனெனில்
இரத்தம் இல்லா இதயம்
ஈரமாக இருப்பதில்லை...

உடையவரே உடைப்பதால்
உடைந்த கண்ணாடித் துண்டுகள்
ஒருபோதும் மகிழ்வதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...