சே...
சே...
அடர்இருள்மேல்
விழுந்த ஒளி...
சே...
உறைந்து கிடந்த
உலகின்மீது
காலம் கவிழ்த்த
நெருப்பு...
சே...
ஓரிடத்தில்
விழும்போது
வேறிடத்தில்
எழுகின்ற
மறைவே இல்லாத
ஞாயிறு...
அந்த
ஞாயிறு துகள்கள்
நினைவுகளில்
நிற்கும்வரை
நீர்த்துப்போகாது
நீர்சூழ் உலகு...
Comments
Post a Comment