நகர்த்துகின்றன இரவை...

என் இரவுகளில்

உறக்கப் பலகையில்

சோழி உருட்டுகின்றன

உன் நினைவுகள்...

கவிந்த சோழிகள்

கனவுகளாகின்றன...

நிமிர்ந்த சோழிகள்

இழுத்து

நகர்த்துகின்றன

இரவை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...