என் கண்கள் விழிக்கும்வரை..

 உன் நினைவுகள்

சுற்றித் திரிகின்றன

பட்டாம்பூச்சிகளின்

கூட்டம்போல...

இறக்கைகளின்

ஒவ்வொரு அசைவிலும்

நிறங்கள் உதிர

வண்ணங்களின்

கலவையாகிறது

இரவு...

என் கண்கள்

விழிக்கும்வரை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...