புதிதாக விடியட்டும்...

 முகத்தின்

புன்னகையை

மூடிவைத்த

மோசமான நாட்கள்

முடியட்டும்...

கொஞ்ச வரும்

குழந்தையைக்கூட

சட்டெனக்

தூக்கத் தயங்கிய

துயரமான கணங்கள்

முடியட்டும்...

விரிந்த வெளியிருக்க

வீடே சிறையாகிப்போன

வேதனை நாட்கள்

முடியட்டும்...

எதிர்வரும் ஆண்டில்

இறையருளால்

இன்னல்கள் நீங்கி

இன்பங்கள் பெருகி

புதிதாக விடியட்டும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...