இப்போதும்...

 என் இரவுகளை

எடுத்து

மைதீட்டுகிறாய்...

என் பகல்களை

எடுத்து

முகம் ஒற்றுகிறாய்...

நாட்களையெல்லாம்

நீ எடுத்துக்கொண்டபின்

நானெப்படி

அகவைகளைக்

கடப்பது...

உன்னைப் பார்த்த

நாளில்தான்

நிற்கிறேன்

இப்போதும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...