சே

சே
யாரென்று தெரியாதோர்க்கு
சில வரிகள்...

துயருற்ற மனிதரெல்லாம்
தோழரென்றே
துயர்துடைக்க
சூளுரைத்த
தோழன் அவன்...

எளிய மனிதரின்
கால்களை
இறுகப் பிணைத்த
அடிமை விலங்குகளின் மேல்
இடியென இறங்கிய
சம்மட்டி அவன்...

வணிகமே உலகம்
உலகமே வணிகமென்ற
மாயக் கோட்பாட்டை
மிதித்து உடைத்து
மனிதமே உலகம்
உலகமே மனிதமென்று
உரக்கச் சொல்லிய
உத்தமன் அவன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...