நதியாகவே...

நதி
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது...
பெருக்கெடும்போது
பெருகி
வற்றும்போது
அருகிப்போகும் மீனுக்கும்
பாயும்போது
பக்கத்தில் வந்து
காயும்போது
எட்டிச்செல்லும் மானுக்கும்
ஒரே தண்ணீரோடு...
நான்
நதியாகவே இருந்துகொள்கிறேன்
மீனுக்கும்...
மானுக்கும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...