இன்றில்லை...

இமைகள் மூடித்
திறக்கும் முன்
கழிந்து போயின
இரண்டு ஆண்டுகள்...

விதையாக நான்
விழுந்தபோது
எனைத் தாங்கிய
நிலம் இன்றில்லை...

வேர்ப்பிடித்து நான்
வளர்ந்தபோது
எனை நனைத்த
நீர் இன்றில்லை...

இலைகளோடு நான்
இரையாக நின்றபோது
எனைக் காத்த
நெருப்பு இன்றில்லை...

கிளைத்து நான்
செழித்தபோது
எனை வருடிய
காற்று இன்றில்லை...

கனிசெழிக்க நான்
உயர்ந்தபோது
எனை நோக்கிய
வான் இன்றில்லை...

என் ஐம்புலன்களும்
தேடும் ஐம்பூதங்கள்
என்று வரும்...?

#தந்தைக்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...