ஐம்பூதங்கள்

ஐம்பூதங்களில் மூன்றில்
உங்களுக்கான உரிமைகள்
உருவப்பட்டதை
உணரவேயில்லை நீங்கள்...

நிலம் எனதென்று
நீங்கள் சொன்னால்
நெஞ்சு கிழிபடும்...

நீர் எனெதென்று
நீங்கள் சொன்னால்
நெற்றி துளைபடும்...

காற்று எனெதென்று
நீங்கள் சொன்னால்
நுரையீரல்கள் சிதைபடும்...

எனவே
அடிவயிற்றில் நெருப்பெரிய
ஆகாயம் பார்த்து
அமர்ந்திருங்கள்...

உயிர் மட்டுமேனும்
உங்களுடையதாகவே இருக்கும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...